பேட்டி

காந்தி ஜெயந்தியன்று
ஹன்சிகாவின் பேட்டி!
சுதந்திரதினத்தன்று
சமந்தாவின் பேட்டி!
குடியரசு தினத்தன்று
குஷ்புவின் பேட்டி!
தமிழர் தினத்தன்று
தமன்னாவின் பேட்டி!
பேட்டி காண்பதில்
போட்டி போட்டு தன்
ரேட்டிங்கை உயர்த்திக்கொண்டது
தொலைகாட்சி பெட்டி!

உண்மையை உறங்கவிட்டு
உளறல்களில் கிறங்கும்
ஊடகங்கள்!
உல்லாச சினிமாவை
உரசி உரசியே
உயர்த்திக் கொண்டது
தன் வருமானத்தை!

உறக்கம் மறந்து
நிர்வாண நடிகைக்கும்
நிஜமில்லா நடிகனுக்கும்
கொடிபிடித்து தாழ்த்திக்
கொண்டான் தமிழன்
தன்மானத்தை!

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence