எப்பொழுதும் எல்லா சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இந்தியாவில் இப்பொழுது விவசாய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு வலுக்கின்றதுஇந்த சட்ட திருத்தம் என்ன சொல்கின்றது என்றால் இதுதான், அதாவது அரிசி கோதுமை பருப்பு எண்ணெய் வித்துக்கள் போன்றவை அத்தியாவாசியம் என்ற வகையில் இருந்து ஏற்றுமதி போன்ற பிரிவுக்கு மாற்றபடுகின்றதுஇது போக விலை உத்திரவாதம், வேளான் சேவைகள் திருத்தம் என கூட இரு திருத்தங்களை செய்கின்றதுஇது விவசாயிகளை கொந்தளிக்க வைக்கின்றது, நெல்லும் கோதுமையும் அரசால் ஒரு குறைந்த விலையில் கொள்முதல் செய்யபடும். இனி தனியார்கள் அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள் என அச்சமூகம் அஞ்சுகின்றதுஅரசோ அப்படி அல்ல எங்களின் கொள்முதல் எக்காலம் போல் நடக்கும் அது அல்லாமல் நாம் நியாவிலை கடைகளை நடத்தமுடியாது, எங்களை விட தனியார் அதிக விலை கொடுத்தால் அது உங்களுக்கு லாபம் அல்லவா என விளக்கம் அளிக்கின்றதுஇதுவும் யோசிக்க வேண்டிய விஷயம்ஒரு குறைந்தபட்ச விலை எப்பொழுதும் உண்டு, அரசு கொள்முதலும் உண்டு,அதற்கு மேல் நல்ல விலை இருந்தால் தாராளமாக விற்கலாம் என அரசு சொல்வதும் ஏற்புடையதேஇது எதை நோக்கி செல்கின்றது என்றால் ஏற்றுமதியினை நோக்கி செல்கின்றதுஅதாவது இங்கு அத்தியவாசியம் என சொல்லி பல விவசாய பொருட்கள் தேக்கி வைக்கபடுகின்றன. அரிசி கோதுமை பருப்பு என ஏகபட்டது உண்டுஅவைகள் பலநேரம் வீணாகவும் போவது உண்டுமிகுந்த கட்டுபாட்டுக்கு இடையில் ஏற்றுமதி உண்டே தவிர இங்கு தேங்குவதும் நாசமாவதும் அதிகம்இந்தியாவின் பரப்பில் 50ல் ஒருபங்கு கூட இல்லா வியட்நாமும், பர்மாவும், தாய்லாந்தும் உலகுக்கே அரிசி விற்கின்றது, பாகிஸ்தான் அரிசி கோதுமையினை அள்ளி எறிந்து வீசுகின்றதுஇந்தியாவில் இருந்து சிலவகை அரிசிகள் பெரும் கட்டுப்பாட்டுடன் ஏற்றுமதியாகும், இது மிக சிறிய அளவேமீதெமல்லாம் உணவு பாதுகாப்பு என இங்கு வைக்கபடும், இப்பொழுது இந்தியாவில் உணவு பஞ்சம் இல்லை எனும் நிலையில் அரசு அதை விற்பனை செய்ய எண்ணுகின்றதுஏற்றுமதிகள் பெருகினால் நமக்கு அன்னிய செல்வாணி பெருகும் விவசாயிகளுக்கும் லாபம் வரும் என்பது அரசின் கணக்குஇப்பொழுது வெங்காயம் ஏற்றுதியாகும் ஆனால் ஒரு கட்டத்தில் நாட்டில் தட்டுபாடு என்றால் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கின்றோம் அல்லவா, அப்படி உணவு பொருள் தட்டுபாடு வந்தால் அதையும் தடை செய்வோம் என்கின்றது அரசுஇது நியாயமான விளக்கமாகவே படுகின்றதுவிவசாயத்தில் வாழை ஓரளவு லாபம், அதுவும் எப்பொழுது லாபமென்றால் ஏற்றுமதி சரியாக இருக்கும் காலங்களில் லாபம், ஏற்றுமதி இல்லையென்றால் அதுவுமில்லைவிவசாயி செய்யும் செலவுக்கு ஒரு வாழைதார் 2000 ரூபாய்க்கு சென்றால்தான் கட்டுபடியாகும், அந்த விற்பனை இந்தியாவில் சாத்தியமில்லை, ஏற்றுமதி ஒன்றேதான் வழிகவனியுங்கள் இந்தியாவில் திடீரென தக்காளி தெருவெல்லாம் கிடக்கும், காய்கறி தேடுவாரற்று கிடக்கும், விலையில்லா நிலையில் விவசாயி அழுவான்இதையே ஏற்றுமதி என சொல்லிபாருங்கள் அவை நிச்சயம் நல்ல காசுக்கு செல்லும் விவசாயி நஷ்டபட மாட்டான்தேவைக்கு அதிகாக இருப்பதை விற்பது ஒன்றும் தவறல்ல, இதை விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.மாணவர்கள் உட்பட எல்லோரையும் பயமுறுத்தியே அரசியல் செய்யும் கூட்டம் இப்பொழுது விவசாயிகளை தூண்டிவிட கிளம்பிவிட்டதுசரி இதுகாலம் இவர்கள் விவசாயிக்கு என்ன செய்தார்கள் என்றால் சொல்ல தெரியாதுஏன் விவசாயிகள் திருத்த சட்டத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு? விவசாயிகள் மேல் அக்கறையா இல்லை, சுத்தமாக இல்லைஇது விவசாயிகளை சுரண்டும் தனியார் சந்தைகள் உட்பட இரக்கமில்லா வியாபார கூட்டத்துக்கு பெரும் அடியாக அமையும்ஆம், இங்கு கருணாநிதியின் உழவர் சந்தையெல்லாம் மாடியில் காய்கறி வளர்க்கும் வீட்டுகார விவசாயிக்கானது, சுமார் 50 கிலோ வரைதான் அவனால் சந்தையில் விற்க முடியும்அதுவும் அவன் இருந்து வியாபாராம் பார்பானா? விவசாயம் செய்வானா?.ஆயிரம் கிலோ, இரண்டாயிரம் கிலோ என உற்பத்தி செய்யும் விவசாயி காய்கறிகளையோ இல்லை தானியங்களையோ எங்கு விற்பான்?அவன் சந்தைக்கே செல்வான், அங்குதான் புரோக்கர் உலகம் ஆரம்பிக்கும், வியாபாரிகளோடு கை கோர்த்து அவர்கள் விவசாயினை சுரண்டுவதுதான் உலகின் மிகபெரிய சுரண்டல்ஆம், உதாரணத்துக்கு ஒரு கத்தரிக்காய் மூட்டையினை ஆயிரம் ரூபாய்க்கு விற்று கொடுத்தால் அவன் புரோக்கர் கமிஷன் 200 ரூபாய் (வியாபாரியிடம் வாங்குவது தனி கணக்கு)இது போக வாடகை, சந்தை கமிஷன் என உறிஞ்சபட்டு விவசாயிக்கு வருவது வெறும் 400 ரூபாய்தான்இவ்வளவுக்கும் அந்த மூட்டை 5 ஆயிரத்துக்கு விற்றால்தான் கட்டுபடியாகும், நிச்சயம் அந்த மூட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு செல்லும்., ஆனால் புரோக்கரும் வியாபாரியும் செய்யும் தந்திரம் விவசாயியினை சுரண்டும்இதை தடுக்க சொன்னால் கருணாநிதி அதை செய்யாமல் "உழவர் சந்தை" என உழப்பிவிட்டார்ஆம், அவர் செய்தது உழவர் துரோகம், மிகபெரும் துரோகம்காங்கிரஸ் விவசாயிகள் கடன் தள்ளுபடி என சொல்லவருமே தவிர ஒருகாலமும் இந்த தனியார் கொள்ளைக்கும், விவசாயி சுரண்டலுக்கும் முடிவு சொல்லாது.இங்கு விவசாய மானியமும், கட்ன தள்ளுபடியும் இந்த வியாபார புரோக்கர் கூட்டத்துக்குத்தான் லாபமே தவிர, விவசாயிக்கு மிஞ்சுவது மண்ணேமுதல் முறையாக மோடி அரசு விவசாயிகளின் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைக்கவும், கிடைக்கும் நல்லவிலை இந்த இடைதரக இம்சைகள் இன்றி கையில் கிடைக்கவும், அதனால் ஏற்றுமதி பெருகி நாட்டுக்கும் வருமானம் வரவும் சில நடவடிக்கைகளை எடுக்கின்றதுஅதற்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம்விவசாயி சந்திக்கும் இன்னல் மிகபெரிது, பெருகிவிட்ட விலைவாசி, ஆட்கிடைக்கா நிலையில் வேலையாள் மிகபெரிய சம்பளம் என அவனின் போராட்டம் பெரிதுஇதிலும் வறட்சி, வெள்ளம், காற்று, மின்சாரம், பருவகால நோய் என எல்லாவற்றையும் தாண்டித்தான் அவன் விளையவைக்க முடிகின்றதுஒரு கிலோ அரிசி 500 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் வாழமுடியும், ஒரு கிலோ பருப்பு 800 ரூபாய்க்கு விற்றால்தான் அவன் தொடர்ந்து நிற்க முடியும்அதை இங்கு செய்தால் ஒருவனுக்கும் உணவு கிடையாது, அப்படி செய்யாமல் விவசாயி வாழவும் முடியாதுஇதனால் இங்கு உணவுபொருள் எல்லோருக்கும் கட்டுபடியாகும் விலையில் வழங்கவும், அதே நேரம் விவசாயியும் வாழவும் பெரும் கட்டுபாடற்ற ஏற்றுமதி ஒன்றே வழிஇந்திய அரசு அந்த நோக்கில்தான் சட்டத்தை திருத்தியிருக்கின்றது, இது தவறாக புரிந்து கொள்ளபட்டு விவசாயி அழியபோகின்றான் என இங்கு விவகாரமாக்குகின்றதுவிவசாயி ஏற்கனவே அழிந்துவிட்டான், அவன் கொஞ்சம் உயிரோடு முணங்குகின்றான், அவனை உயிர்பிக்க நடவடிக்கை எடுக்கின்றது அரசுஇல்லை அவன் அப்படியே கிடக்க வேண்டும், அவ்வப்பொழுது அவன் வாயில் பால் ஊற்றி சாகாமலே வைத்து அரசியல் செய்வோம் என கிளம்பியிருக்கின்றன எதிர்கட்சிகள்இந்திய பரப்பளவில் ஒரு புள்ளிக்கு கூட வராத வியட்நாம், தாய்லாந்து எல்லாம் விவசாய பொருட்களை இந்தியாவினை விட பெரிதாக ஏற்றுமதி செய்கின்றனபாகிஸ்தான் கூட ஏற்றுமதியில் சம்பாதிக்கின்றதுஆனால் எல்லா வளமும் ஏகபட்ட நதிகளும் ஏரிகளும் உழைக்கும் மக்களும் கொண்ட இந்தியா, உலகுக்கே சோறுபோடும் தகுதி கொண்ட இந்தியாவில் இருந்து ஏற்றுமதி நடந்துவிட கூடாது, அப்படி நடந்தால் அதாவது இந்திய விவசாயி சம்பாதிக்க ஆரம்பித்தால் அந்நாடு வல்லரசாகும் என்பதை தடுக்க பல சக்திகள் திட்டமிடுகின்றனஇதற்கு இந்தியாவில் காங்கிரஸில் இருந்து பல கட்சிகளும் வழக்கம் போல திமுகவும் துள்ளி குதிக்கின்றதுசீனா போல அல்ல இந்தியா, அதன் விவசாய பரப்பும் நீர்வளமும் மக்கள் உழைப்பும் மகா அலாதியானது, இதை நுட்பமாக அறிந்துதான் அடிக்கடி செயற்கை பஞ்சம் ஏற்படுத்தி இந்தியாவினை ஏழை நாடாகவே வைத்து சம்பாதித்தான் வெள்ளையன்இந்தியா தாண்டி ஆப்கன் சீனா என அவன் செல்லாத காரணம் இதுவேதான்ஆம், இந்நாட்டின் விவசாய வளம் பெரிது, நிலவளமும் நீர் மேலாண்மையும் மிக பெரிது , ஆயிரகணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பாரம்பரியம் அதுஇந்திய விவசாய பொருட்களை முறையாக உற்பத்தி செய்து அதை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் இத்தேசம் மிகபெரிய வருமானத்தை எட்டும்.யாரெல்லாம் இந்த திட்டத்தை எதிர்க்கின்றார்களோ அவர்களெல்லாம் இந்தியா விவசாய பொருளை ஏற்றுமதி செய்யாமல் உழவனை வாழவிடாமல் அப்படியே தேசத்தை ஏழை தேசமாகவே வைத்திருக்க விரும்புகின்றனர் அல்லது அப்படி விரும்பும் அந்நிய சக்திக்கு துணை செல்கின்றனர் என அர்த்தமன்றி வேறல்லகம்யூனிஸ்டுகள் செய்வதெல்லாம் சீன ஆதரவு இந்திய எதிர்ப்பு என்பதொன்றும் ரகசியமே அல்ல..ஆம் இதில் அந்நியசக்தியின் கரங்களும் உண்டு, அதற்கு வழக்கம் போல் காங்கிரசும் திமுகவும் துணை செல்கின்றனவைகோ உற்சாகமாக கத்துவதை விட இதற்கு வேறு சான்று தேவையே இல்லை.. Get link Facebook X Pinterest Email Other Apps December 06, 2020 Read more
Corena song Get link Facebook X Pinterest Email Other Apps May 25, 2020 https://youtu.be/-4DiZQeTF90 Read more
Cipp video Get link Facebook X Pinterest Email Other Apps April 16, 2020 https://youtu.be/vq8CMsd-4To Read more