காமராஜ் என்னும் கடவுள்

கடவுளை கண்டதில்லை  - நாங்கள்
காமராஜை கண்டிருக்கிறோம்!

சாதி  சண்டையில்
சமயம் கழித்த - எல்லா
சாதிக்காரனும் வாழ்வில்
சாதிக்க வீதிதோறும்
கல்விச்சாலைகள் தந்த
கலைமகளின் தலைமகன்!

வகுப்புவாதபேதம் நீக்கி
எல்லா வகுப்பினருக்கும்
பள்ளி வகுப்பறைகளை
வகுத்து கொடுத்த
வள்ளல்!

காசு சேர்க்க வேசம்
போடும் மோசக்காரர்கள்
மத்தியில்....!

தேசத்தின் மாசு நீக்க
விருதுப்பட்டியில் அவதரித்த

மாசு மறுவற்ற
ஏசு பிரான்!

தாய்க்கு நீ
மகனில்லை
தமக்கைக்கும்
அண்ணனில்லை
ஊர்சுமை ஏற்றாயடா!
உன்னிடம் கர்ணனும்
தோற்றானடா!

எழுத்தறிவித்தவன் இறைவன்
என்பது உண்மையானால்
கதர்சட்டை அணிந்த
கருப்பு தங்கம்
காமராஜரே எங்கள்
கடவுள்!



Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence