குழவி பருவம் உடல், அறிவு மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சி (Physical, congitive, Social and Emotional Development of Infancy)
குழவி பருவம் உடல், அறிவு மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சி (Physical, congitive, Social and Emotional Development of Infancy)
உடல் வளர்ச்சி( Physical Development)
உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எலும்பு தடிமன், அளவு, எடை ,மற்றும் உடலின் மொத்த இயக்கம்(cross motor)மற்றும் சிறப்பான இயக்கம்(fine motor) பார்வை, கேட்டல் மற்றும் புலன் உணர்வு வளர்ச்சி போன்றவை உடல் வளர்ச்சியை குறிக்கிறது
* குழந்தையின் எடை பிறந்ததிலிருந்து நான்கு ஐந்து மாதங்களில் இரட்டிப்பாகும் 10 12 மாதங்களில் எடை மூன்று மடங்காகும்
ஒன்று மூன்று மாதங்களில் 3 cm உயரம் அதிகரிக்கும். நான்கு ஆறு மாதங்களில் மேலும் 2 cm உயரம் அதிகரிக்கும் 7 12 மாதங்களில் மேலும் ஒன்றரை சென்டிமீட்டர் அதிகரிக்கும்.
*ஆரோக்கியமான குழந்தை பிறந்தவுடன் அதன் எடை 3.5 Kg இருக்கும். அதுபோல பிறந்த குழந்தையின் உடைய உயரம் 50 சென்டிமீட்டர் .
* இந்தப் பருவத்தில் இதயமும் நுரையீரலும் விரைவில் வளர்கின்றன.
*இதயத்தின் வளர்ச்சி அதிகரித்து வலுவடைகிறது பிறந்த பொழுது ஆண் குழந்தைகளுக்கு நாடித்துடிப்பு 130 ஆகவும் பெண் குழந்தைக்கு 144 ஆகவும் இருக்கும். மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு 95 ஆகவும் பெண் குழந்தைக்கு 90 ஆகவும் இருக்கும்.
* குழந்தை பிறந்ததிலிருந்து அதனுடைய 8 ஆறிலிருந்து எட்டு மாதங்கள் வரை பார்வை திறன் என்பது மங்கலாகவே அவர்களுக்கு இருக்கும் காது கேட்கின்ற சத்தத்தை வைத்து தான் அவை புரிந்து கொள்ளும்
* கால் மற்றும் மத்திய பகுதி கை கால்களுக்கான அடிப்படை அனிச்சை வளர்ச்சி நடைபெறும்
* கை மற்றும் கண்கள் ஒன்றாக வேலை செய்வது(eye hand co-ordination)
*தங்கள் கைகள் மற்றும் கால்களை நகர்த்தல் கால்களை சுழலுதல்
பால் பற்கள் முளைத்தல்,தவழுதல், ஊர்ந்து செல்லுதல் ,ஒரு
சிறிய உதவியுடன் முதலில் உட்கார, நடக்க முயலுதல், 1 வயது தாண்டியதும் நடக்க ஆரம்பித்தல் ஓடுதல், துள்ளுதல், தாவுதல் போன்றவைகளை செய்ய முயலும்
*பொருட்களை ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு மாற்றுதல்.
* தாள்களை பக்கங்களை புரட்டுதல்,
விரல்களை வைத்து எழுதுகோல்களை பிடித்தல் போன்றவை
அறிவு வளர்ச்சி (Cognitive development)
* சில வார்த்தைகள் மட்டுமே பேசும்
*இல்லை என்ற வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும்
*உருவங்கள் மற்றும் அதன் அளவுகள் பற்றி தெரிந்து கொள்ளும்
*அழுவதன் மூலமும், சத்தம் எழுப்புவதன் மூலமும் தன்னுடைய தேவைகளை நிறைவு செய்யும்
*ஒரு பொருளை உற்று நோக்கும்
திடீர் சத்தம் காட்சிகளுக்கு ஆச்சரியப்படும்.
*நறுமணம் மற்றும் சுவை வேறுபாடு அறியும்
*இனிப்பு திரவங்கள் சுவைக்கும் விரும்பத்தகாத நறுமணத்திற்கு முகம் சுளிக்கும்.
*மாறுபட்ட வெளிச்சம் மற்றும் வண்ணங்களை நோக்கி தலையை நகர்த்தும்.
* பொம்மைகளின் ஒலி சத்தம் நோக்கி அடைதல்
*பாதுகாப்பாளர்களின் இயக்கங்கள் மற்றும் வெளிப்பாடுகளை 'போலச் செய்ய' நகலெடுக்க ஆரம்பிக்கும்.
*ஒரு நேரத்தில் ஒரே ஒரு பொம்மை மீது மட்டும் கவனம் செலுத்தும்.
*பராமரிப்பாளர் பேசும் வார்த்தை உருவாக்கும் சத்தங்களை குழந்தைகள் பின்பற்றும் போலச் செய்யும்.
*ஒரு வயதிற்குப் பிறகு முதல் நிலை உறவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளும்.
*வீடுகள் வரைபடங்கள் மற்றும் இவர்களுக்குப் பிடித்த பலவற்றை வரைவார்கள் உருவாக்குவார்கள்.
*தாய் பாடும் தாலாட்டுகளையும் கூறும் கதைகளையும் குழந்தை நினைவில் நிறுத்தி அதனை திரும்பக் கூறி மகிழ்கின்றது
மனவெழுச்சி வளர்ச்சி (Emotional Development)
*குழந்தை தூங்குதல் ஒரு நாள் சராசரியாக 17 மற்றும் 19 மணி நேரம் தூங்கும்
*குழந்தைக்கு முன்பு யார் சிரிக்கிறார்களோ அவர்களைப் பார்த்து பதிலுக்கு புன்னகை தெரியும்
*தனக்குப் பிடித்தமான பொம்மை இடம் தன்னை இணைத்துக் கொள்ளும்
*ஆரம்பத்தில் அதிக தேவை உறுதி மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும்
தனியாக விளையாட விரும்பும்
*மகிழ்ச்சி, கோபம், பயம் போன்ற உணர்வுகளை அடிக்கடி வெளிப்படுத்தும்.
*ஒரு வயது ஆன பிறகு இரக்கம், அன்பு, ஒத்துப்போகும் தன்மை சமூக தொடர்புகள் போன்றவைகள் காணப்படுகின்றன
*பெற்றோர்களிடமிருந்து அன்பையும் பாசத்தையும் மிகுதியான அளவு எதிர்பார்க்கின்றனர்
சமூக வளர்ச்சி(Social development)
*இப்பருவத்தில் குழந்தை தனது பெற்றோரை சார்ந்து இருக்கின்றது.
பின்பு அதன் முதன்மை பராமரிப்பாளர்களை அங்கீகரிக்கிறது.
*தங்கள் பராமரிப்பாளரை விட்டு பிரியும் போது குழந்தை அழவும் கவலை கொள்ளவும் செய்யும்.
*தொடக்கத்தில் தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய பெரியவர்களை பார்த்து குழந்தை பயப்படும் பின்பு போக போக அவர்களையும் அறிந்து பழக ஆரம்பித்து விடும்
Comments
Post a Comment