கௌரவ கொலைகள்

நிமிர்ந்து நடக்க
தெம்பிருக்கு!
மனசிலே ஆசையிருக்கு
ஆனால்!வழியில்லை
முதுகிலே புத்தக சுமை!

அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
கண்களிலே தோன்றிய
கௌரவ கனவை
நாங்கள்தான் முதுகில் சுமக்கிறோம்!
எங்கள் வயதின் நியாயக்
கனவுகளை மூட்டைகட்டி
மூலையில் போடுகிறோம்!

என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?
என்றவனே இன்று சொல்
என்று குறையும் எங்கள்
முதுகில் பாரம்!

ஒடி விளையாடு பாப்பா
என்று நீ
சொன்னாய்!
ஓடி ஓடி படி
அப்பா சொல்கிறார்!

மணமானவனை விட
மாணவனாகிய எனக்குதான்
பொறுப்பு அதிகம்!

நாலரை வயதிற்குள்
நாவில் ஆங்கிலம்
பேச வேண்டும்! கூடவே
ஆயக்கலைகளில் பாதியாவது
பயில வேண்டும்!

எட்டரை வயதிற்குள்
கணிப்பொறியை கரைத்து
குடிக்க வேண்டும்! கணிதம்
முதல் கலாச்சாரம் வரை
கைவிரல் நகத்தில் கொண்டு
வர வேண்டும்!
பதினைந்து வயதில் அரசு
தேர்வில் மாவட்ட அளவும்,
பதினெழு வயதிற்குள் உலக
சாதனையும் படைக்க வேண்டும்!

இவற்றை நனவாக்க
மூன்று வேளை சாப்பாடு!
ஆறு வேளை டியுசன் செல்ல
வேண்டும்!
மீறினால்அப்பா சன்
என்றும் பாராமல் அடிப்பார்!
வின் னென்று வலிக்கும்!

அப்பா அம்மாவின் கெளரவ கனவை நிறைவேற்ற!
எங்களின் சிறுவயது ஆசை
கனவுகளை தொலைத்து
நிற்கிறோம்!

இப்பொழுது சொல்லுங்கள்
பொறுமைசாலி யார்?
பொறுப்புணர்வு யாருக்கு அதிகம்?
மாணவனாக இருப்பதை விட
மானாக மீனாக பிறந்திருந்தால்
துள்ளி குதித்திருப்போம்!
பட்டாம்பூச்சியாக பிறந்திரூந்தால் சிறகடித்து பறந்திருப்போம்!

மனிதனாக பிறந்ததனால்
மாணவனாக இருப்பதினால்
பெற்றோர் கெளரவ கனவை
காக்க!,எங்கள்  ஆசைகள்
கெளரவ கொலை செய்யப்படுகின்றன!

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence