கலைஞன்

விரிந்து கிடக்கும் காட்சிகளை
உரிந்து எடுத்து இதயத்தில்
இருத்தி வைத்து கண்ணுக்குள்
கலையாக்கி கைகளில் வருத்தி
துரி கைகளினால் வரைந்து
பார்ப்போரின் கண்களை தனதாக்கி
வைப்பான் ஓவியக் கலைஞன்!

கரடுமுரடான கல்லை
வில்லென வளைத்து
முல்லை பூவெனஉருட்டி
தன் கைகளை வளைத்து
விரல்களை நெளித்து
அற்புதமென சிற்பம்
செய்வான் சிற்பக் கலைஞன்!

உணர்வுகளை முகத்தில்
உலர்த்தி!
உதட்டில் புன்னகை
மலர்த்தி!
உடலில் உவகைகளை
புகுத்தி!
வளைவு களையும்
நெளிவுகளையும்
சுளிவுகளையும்
கண்ணுக்கு விருந்தாக்கும்
ஆடல் கலைஞன்!

குரலில் குயிலை
குடிமர்த்தி!
தாளத்தில மனதை
தளிர் விட செய்து!
ராகத்தில் நாளங்களுக்கு
நாணேற்றி!
மெட்டுக்களில் இதயத்தை
கட்டிப் போடும்
இசைக் கலைஞன்!

உச்சரிப்பால் தமிழுக்கு
உயிரூட்டி!
கேட்போர் உணர்விற்கு
உரமூட்டி!
சிறகடிக்கும் சிந்தனைகளால்
சமுதாயம் சமைக்கும்
கவிஞன்
எழுத்தாளன்
பேச்சாளன் என்னும்
சமூக கலைஞன்!

இவர்கள் எல்லாம்
கடவுளின்
செல்லப் பிள்ளைகள்!



Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence