நன்றி இறைவா!
ஆண்டவனின் உள்ளம்!
அழகான இல்லம் .....
அன்போடு அணுகினால்
அற்புதமாக அருளிடும்!
பொறுமையோடு அணுகினால்
பொன்னாக மலர்ந்திடும்!
கண்ணீர் சிந்தினால்
கருணையோடு காட்சி தரும்!
கலங்கும் மனதினில்
கதி தந்து!
கலங்காதே எனற
ஜதி தந்து!
கஷ்டத்தில் களிர்
மனம் தந்து!
துன்பம் துடைத்து
தளிர் சுகம் தந்து!
பல காத்திருப்புகள்
தந்து!
பல துரோகங்கள்
தந்து!
பல ஏமாற்றங்கள்
தந்து!
ஒவ்வொன்றிலும
ஒரு பாடம் தந்து!
வாழ்க்கை கடலில்
நீந்த வலிமை
தந்த இறைவா!
நன்றி உனக்கு!
Comments
Post a Comment