கவனம், பொருள், வரையறை, தன்மைகள் & தீர்மானிக்கும் காரணிகள்
கவனம்
பொருள்
கவனம் அல்லது கவனித்தல் என்பது நாம் நனைவு நிலையில் இருக்கும்போது ஏதாவது நம் முன் தோன்றும் அல்லது ஐம்புலன்களின் வழியே நம்மை பாதிக்கும் பல தூண்டல்களில் எவை பற்றி நாம் தெளிவாக அறிய முற்படுகிறோமோ அல்லது விரும்புகிறோமோ அவையே கவனமாகும்.
பொதுவாக கவனம் என்பது தனிமனிதன் ஏதாவது ஒன்றை செய்வதற்கான தயார் நிலையை அல்லது மனப்பான்மையைக் குறிக்கின்றது.
கவனம் வரையறை
ஒரு பொருளை தெளிவாக அறிய முற்படும் முயற்சியே கவனம் ஆகும் - மக்டூகல்
கவனம் என்பது ஒரு பொருளைப் பற்றிய தெளிவான கருத்துக்களை அடையும் முறையை மனதின் முன் வைப்பது ஆகும் - ராஸ்
கவனம் என்பது ஒரு மன சக்தி அல்ல இது மனப்பான்மை அல்லது மனதின் செயல்களை குறிக்கிறது -
வாலெண்டைன்
கவனித்தலின் தன்மைகள்
1.கவனம் ஒரு செயல்முறையை அது ஒரு விளைவு அல்ல
2. இது ஒரு அறிதிறன் மட்டுமல்ல உணர்வுத் திறன்களான ஆர்வம், மனப்பான்மை, விருப்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது
3. அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நனைவு நிலையை குறிக்கிறது
4.இது மாறக்கூடியது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்கு மாறும்
5.தூண்டுதலுக்கும் துலங்களுக்கும் இடைப்பட்ட செயல்முறையை கவனம்
6.புதிய பொருட்களால் ஈர்க்கப்படும்
7.கவன மனப்பான்மையை வளர்க்கிறது
8.எந்த பொருளின் மீது கவனமாக இருக்கின்றோமோ அவற்றை தெளிவோடு நம் மனதில் நிறுத்தி வைக்கிறது
9.இது குறுகிய பரப்பெல்லையைக் கொண்டுள்ளது. அதாவது நாம் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கை உள்ள பொருட்களின் மீது மட்டும் கவனம் செலுத்த முடியும் .
கவனித்தலை தீர்மானிக்கும் காரணிகள் :
கவனித்தலை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன
1.அகக்காரணி
2.புறக் காரணி
1.அகக்காரணி
இக்காரணிகள் ஒருவனிடம் தன்னகத்தை அமைந்துள்ள காரணியாகும்
அவை
a)தேவை b)மரபு c)பழக்க வழக்கம் d)ஆர்வம் e)மனநிலை f)உடல்நிலை g)மனவெழுச்சி
a)தேவை : உடனடித் தேவை கவனத்தை பாதிக்கிறது (தேர்வு சமயத்தில் பாடத்தின் மீது கவனம் அதிகரிக்கும்)
b)மரபு : பெற்றோரின் மரபொருத்து கவனம் அமையலாம்
C)பழக்கவழக்கம் : பயிற்சியும் பழக்கவழக்கமும் கவனத்தை நிர்ணயிக்கின்றது நல்ல பழக்கவழக்கம் உள்ள குழந்தைகள் மிகவும் கவனத்துடன் இருப்பர்.
d)ஆர்வம் :ஆர்வம் இருந்தால் சிறந்த முறையில் அதிக அளவு கவனம் அமையும்
e)மனநிலை :ஒருவன் அவனுடைய மனநிலைக்கு தக்கபடி கவனத்தை செலுத்துகிறான்
f)உடல்நிலை :உடல்நிலையைப் பொருத்து மனநிலை அமைகிறது. உடலில் சோர்வு, இயலாமை ஏற்படும் பொழுது உள்ளமும் சோர்வும், புலன் உணர்வு சோர்வும் ஏற்படுவதால் கவனம் குறைவடைவது இயல்பே.
g)மனவெழுச்சி : சோகமான சூழலை விட மகிழ்வான மனநிலையில் சுறுசுறுப்பாக கவனம் அமையும்
புறக் காரணிகள்
a)தூண்டலுக்கான செறிவு b)பொருளின் அளவு c)மாற்றம் d)புதுமை e)வேறுபாடு f)அசைவு g)திரும்ப கூறுதல்
a)தூண்டலுக்கான செறிவு:செரிவான வலுவான ஒரு புறத்தூண்டல் அதிக கவனத்தை ஈர்க்கும் (உதாரணம் ஆசிரியரின் குரலின் செறிவு)
b)பொருளின் அளவு: பொருளின் பெரிய மற்றும் உயரம் போன்ற அளவுகள் கவனத்தை ஈர்க்கும் (உதாரணம் உயரமான மாணவன் )
C)மாற்றம்: ஒரே நிலையில் இல்லாமல் மாற்றம் நிகழ்வது (உதாரணம் வகுப்பறைகளை மாற்றுவது)
d)புதுமை: புதிய பொருட்களால் கவனம் ஈர்க்கப்படும்
e)வேறுபாடு: வேறுபட்ட பொருட்களும் கவனத்தை ஈர்க்கும்
f)அசைவு: அசையும் பொருட்கள் நம்முடைய கவனத்தை ஈர்க்கும் (உதாரணம் வகுப்பறையில் சலனப்படங்கள் மூலம் பாடம் நடத்துதல் )
g)திரும்ப கூறுதல்: தூண்டலானது திரும்பத் திரும்ப நிகழ்ந்தால் அது நம் கவனத்தை கவரும் (உதாரணம் பாடத்தை திரும்பத் திரும்ப கூறுதல் )
Comments
Post a Comment