என் தமிழ்
அம்மா இருக்க
மம்மி எதற்கு?
அப்பா இருக்க
டாடி எதற்கு?
மலர் இருக்க
பிளவர் எதற்கு?
தேன் இருக்க
ஹனி எதற்கு?
காதல் இருக்க
லவ் எதற்கு?
திருமணம் இருக்க
மேரேஜ் எதற்கு?
ஆண்குழந்தை இருக்க
சன் எதற்கு?
பெண் குழந்தை பிறக்க
டாட்டர் எதற்கு?
வேலை இருக்க
ஜாப் எதற்கு?
கோவில் இருக்க
டெம்பிள் எதற்கு?
அன்றாடம் பேச்சில்
அயலான் மொழி
கலப்பது எதற்கு ?
ஆசைத்தமிழ் சொற்கள்
அழகாய் வீற்றிருக்க
ஆடம்பர பகட்டாய்
ஆங்கிலம் எதற்கு?
உயிரை உலர்த்தி விட்டு
மயிரை புடுங்கும்
உளறல்கள் உனக்கெதற்கு?
கயிரை அறுத்துவிட்டு
ஊஞ்சலில் உல்லாசமா?
வயிரை நிறைக்க
வளையுமா நாக்கும்?
நாவினிக்க நானிலம்
போற்றும் நல்ல தமிழ் இருக்க! நயவஞ்சக ஆங்கிலம்
உனக்கு எதற்கு?
நன்றாய் தமிழ் பேசு
பாரெல்லாம் பைந்தமிழ் பாய்வதற்கு
நாளெல்லாம் தமிழ் நாணேற்று!
தமிழ் கூறும் நல்லுலகு
Comments
Post a Comment