பாரதி என்ற மானுடன்
அருவியையும்
குருவியையும்
கண்டு மனம்
உருகியவன்!
காக்கையையும்
கழுதையையும்
கண்டு
மனம்
மறுகியவன்!
இம்மண்ணைக் கண்டும்
தமிழ் பெண்ணைக் கண்டும்
மனம்
கருகியவன்!
சாதிக்கு தீயுமூட்டி
சாதிக்க நீயும் வா
என்றும்!
அழைத்தவன்!
ஒட்டு போட்ட உடையிலும்
வாட்டுகின்ற வறுமையிலும்
மீசை முறுக்கி காட்டியவன்!
வாழ்க்கை என்பது பணமல்ல
வாழ்க்கை என்பது பதவியல்ல
வாழ்க்கை என்பது பயமுமல்ல
வாழ்க்கை என்பது இலட்சியம்
வாழ்க்கை என்பது வைராக்கியம்
வாழ்க்கை என்பது தைரியம்
வாழ்க்கை என்பது வாழ்ந்து காட்டியவன்!
கவியிலே கனலை
வைத்தான்!
வாழ்விலே உண்மை
வைத்தான்!
நெஞ்சிலே தேசம்
வைத்தான்!
நினைவெல்லாம் தமிழில்
வைத்தான்!
தன் குடும்பத்தை மட்டும்
தெருவில் வைத்தான்!
Comments
Post a Comment