சிங்கப்பூரில் 12 நாள்

சிங்கப்பூர் அழகின் சிரிப்பு அல்ல!

 உழைப்பின் உயர்வு!


ச்சிங்கப்பூர் என்ற பெயர் கேட்ட உடனே
அதன் வானுயர்ந்த கட்டிடங்களும், பிரமாண்டமான வடிவமைப்புகளும் நம் மனக்கண்  முன்னால் வந்து போகும்.சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையினால் மனம் உந்தப்பட்டதின் விளைவாக நவம்பர் 10 முதல் 23 வரையிலான சிங்கப்பூர் பயணத்திற்கு வேண்டிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
நவம்பர் 8 ஊரிலிருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி இரவு 9மணிக்கு பேருந்து நாகர்கோவிலிருந்து கிளம்பியது.
இனி சென்னையிலிருந்து....
சென்னை பெருங்குளத்தூரில் காலை 7.30 க்கு சென்றடைந்தது.அங்கிருந்து கோவிலம்பாக்கம் வெள்ளைக்கல்லில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சகோதரி வீட்டில் அன்று முழுக்க ஓய்வெடுக்கலாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் என் முனைவர் பட்ட சமர்பித்தலில் உள்ள சின்ன  சிக்கலை தீர்ப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைகழகம் சென்றேன்.என் மனைவி மற்றும் மகனுடன் அன்று மாலை 4 மணி வரை அங்கேயே பரபரப்புடன் கழிக்க நேர்ந்தது. அன்றையதினம் பரபரப்பாகவும்,ஓய்வாகவூம் கழிய, 10ந்தேதி காலை 6 மணிக்கு எழும்பி சிங்கப்பூர் செல்ல விமான பயணத்திற்கு தயாரானோம். காலை 8 மணிக்கு விமான நிலையம் அடைந்து காலை உணவை முடித்துக்கொண்டு, விமான நிலையத்தினுள் நுழைந்தோம். இதுவரை வழியனுப்ப மட்டுமே விமான நிலையம் வந்த நான் இன்று முதன்முதலாக பறக்க விமான நிலையம் ந்தோம். சிறுவனாக இருக்கும் போது வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து 'அந்நா போகுது, அந்நா போகுது' என்று கூவியபடி கையை தூக்கியவாறே மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து ஓடிய நாட்கள் நினைவில் வந்தன. 8ம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் இருந்து சுற்றுலா சென்றபோது, திருவனந்தபுரம் விமான நிலையத்தின் வெளியே ஏதோ ஒரு பகுதியில் இருந்து தடுப்பு கம்பியின் வழியே வெகுதூரத்தில் நின்ற விமானத்தை பார்த்ததுதான் விமானத்தை முதன்முதலில் தரையில் பார்த்த அனுபவம்.இதோ இப்போது கண்ணாடி வழியே வெகு அருகில் பார்க்கிறேன். அந்த பிரமிப்பும், மகிழ்ழ்வும் இப்போது இருக்கிறது. பறப்பது என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசைதான் எனக்குள்ளும்சிறுவயதில் இருக்கும் ஆசைதான் இதோ இன்னும் சில மணி நேரத்தில் அந்த ஆசை நிறைவேற போகிறது என்ற ஆவலோடு விமானநிலையத்தின் அனைத்து நடைமுறைகளையும்,சோதனைகளையும் படப்போடும்,பிரமிப்போடும் முடித்துக் கொண்டு, அத்தகைய முதல் அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக்கொண்டு விமான பயணிகள் காத்திருப்பு பகுதிக்கு வந்தேன். அணிவகுத்து நிற்கும் விமானங்களையும்,தரையிறங்க பாய்ந்து வந்து பவ்வியமாய் பூமியை முத்தமிட்டு பின் சிறிய ஓட்டத்திற்கு பின் தன் பகுதிக்குள் அடைக்கலமாகும் விமானங்களும், மெதுவாக ஓடி பின் வேகமெடுத்து சடாரென மேலெழும் காற்றை கிழித்து பாய்ந்து சென்று, உயர உயர பறந்து உயர உயர தன்னை உருவம் பார்போர் கண்ணில் குறைந்து ஒரு கட்டத்தில் காணமல் போகும் விமானங்களின் அழகையும் ரசிக்க ரசிக்க என் மனதில் வந்து போனவர்கள் இரண்டுபேர் ஆம்! ரைட் சகோதரர்கள்தான் அவர்கள்.
ஏர் இந்தியா விமானத்திறக்குள் 34 J ,G,H இருக்கைகளில் அமர்ந்தோம். இந்திய நேரப்படி காலை 11.30 க்கு விமானம் புறப்பட்டது. சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறும்,செல்போன்களை Off செய்யுமாறு பலமுறை அறிவிப்புகள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பு வந்தது. இருக்கையின் முன் இருந்த வீடியோவில் விமானம் குறித்தும், அவசர கால செயல்பாடுகள் குறித்தும் காட்சிகள் ஒளிபரப்ப பட்டது. Passenger announcement என்ற அந்த சிலாகிக்கின்ற அந்த காட்சிகளும்,குரல்களும் இன்றும் சில நேரங்களில் காதுகளில் ஒலிப்பது போல் தோணும்.எங்கள் முதல் அனுபவம் தொடங்கியது. குறைந்த வேகத்துடன் பின்னோக்கி நகர்ந்து தன் ஓடட்ப்பாதையில் (Runway) மிதமான வேகத்தோடு ஓடத்தொடங்கியது விமானம். சிறிது தூரம் ஓடியப்பின் ஓரிடத்தில் திடீரென நின்றது. நானும் என்னவோ, ஏதோ என்று நினைத்துக்கொண்டிருந்த அந்த சில விநாடிகளில் திடீரென விமானம் மனதை பயம் கொள்ள வைக்கும் பெரும் சத்தத்தோடு,பெரும் வேகத்தோடு கொஞ்சம் தூரம் ஓடி பின் படாரென மேலெழுந்து பறக்கத் தொடங்கியது. பெரும் நகரம், சிங்காரச் சென்னை என்றெல்லாம் வருணிக்கப்பட்ட சென்னை மாநகரம் என் கண்களூக்கு சிறிய நகரமாக பின் மிகச்சிறிய நகரமாக மாறி ஒரு கட்டத்தில் காணாமலே போய் விட்டது.
விமானபயணம் வியப்பும்,மகிழ்ச்சியும் கொஞ்சம் பயமுமாக 3.30 மணி நேர பயணத்திற்கு பின்பு விமானம் சிங்கப்பூர் சாங்கி விமானநிலையத்தை வந்தடைந்தது. சிங்கப்பூரில் இனி 12 நாட்களை கழிக்க போகிறேன் என்ற களிப்போடு,விமான நிலையத்தின் அழகை ரசித்தவாறு அங்குள்ள சோதனை நடைமுறைகளை நிறைவுச்செய்து விட்டு, எங்களது உடைமை பெட்டிகளையும் சிறிது தேடலுக்கு பின் எடுத்து விட்டு
வெளியே வரும் போது நேரம் சிங்கப்பூர் நேரப்படி மணி இரவு 7 இருக்கும்.
வெளியே எங்களுக்காக காத்திருந்த அக்கா,அத்தான்,மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரின் ஆனந்த வரவேற்புடன், விமான நிலையத்தின் ஓர் Restaurant ல் உணவு அருந்தினோம். அப்போது சாங்கி விமான நிலையத்தின் பெருமைகளை அத்தான் கூற ந
ன் தெரிந்து கொண்டேன்.
சாங்கீ விமான நிலையம்
உலக அரங்கில் மிக அழகானதாகவும்,பெரிய விமானநிலையங்களில் ஒன்றாகவும் தனக்கென தனிமுத்திரை பதித்து கம்பீரமாக காட்சியளிப்பது சாங்கி விமான நிலையம்.
அன்றைய இரவு சாங்கி விமானநிலையத்தில் அருமையான சிங்கப்பூர் சிற்றுண்டியை முடித்துவிட்டு வாடகை டாக்ஸியில் 45 நிமிடம் பயணம் செய்து சிங்கப்பூரின் செங்காங் பகுதியில் உள்ள கங்கார்ரில் 17B அப்பார்ட்மென்டில் 8 வது தளத்தில் உள்ள சகோதரியின் வீட்டை வந்தடைந்தோம்.
முதன்முதலாக...
முதன்முதலாக என்ற தலைப்பின் கீழ் நான் எழுத முனைவது ஆச்சர்யமும்,அதிசயமும் கலந்த, நடப்பது கனவா!அல்லது நனவா? என்று என்னை நானே கிள்ளி பார்த்து கொள்ளுமளவிற்கு அமைந்த அற்புதமான நிகழ்வுகளைதான்! சிங்கப்பூரை சினிமாவிலும், பத்திரிகைகளிலுமம்,அங்கிருந்து வருபவர்களின் வார்த்தைகளிலும் மட்டுமே கேட்டு ஆச்சர்யப்பட்ட நான் சிங்கப்பூருக்கு செல்வேனென்றோ,விமானத்தில் பறப்பேன் என்றோ கனவில் கூட நினைக்கவில்லை. நடந்ததெல்லாம் வெறும் ஆறுமாத நிகழ்வுகள்தான்.அத்தனையும் கடவுளும், காலமும் இணைந்து நடத்திய நிகழ்வுகள்தான்!
கடந்த இரண்டு வருடங்களாக சிங்கப்பூருக்கு என் சகோதரியும்,அவர் பிள்ளைகளும் பாசமாக அழைப்பதும் நான் புன்முறுவலோடு எதிர்கொள்வதும் சம்பிரதாய அழைப்பாகவும்,சம்பிரதாய ஒப்பு கொள்வதுமே நடந்தது. ஆனால் இதில் முக்கியமான பங்கு என் மனைவிக்கு உண்டு. ஒரு கட்டத்தில் என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பித்தாள்.முதலில் விளையாட்டாக நினைத்த நான் பின் அவள் நச்சரிப்பில் எரிச்சலடைய ஆரம்பித்தேன். ஒருநாள் எரிச்சலுடன்,"சிங்கபூர் போகனும்னா பாஸ்போட், விசா எல்லாம் நீயே எடுத்து நீயே போய்க்கோ! என்னை தொந்தரவு செய்யாத, வேணும்ணா நீ கேட்கிற பணத்தை தந்துடூறேன் "என்றேன். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்ட என் மனைவி அடுத்தநாளே தன் உறவினர் ஒருவர் மூலம் எனக்கும்,அவளுக்கும் பாஸ்போட் எடுக்க விண்ணப்பித்தாள்.
தொடர்ந்து வந்த எல்லா நிகழ்வுகளுக்கும் இயக்குநர் என் மனைவிதான்,இயங்கியது மட்டும் தான் நான்.  இதோ வாழ்வில் முதன்முறையாக ஆகாயத்தில் பறந்து அயல் தேசம் வந்தாயிற்று.இனி சிகப்பூரை சுற்றிப்பார்ப்போம்.
முதல்நாள்(மரினா மரேஜ்)
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு சிங்கப்பூரின்  அடையாளமாக விளங்கும் மரினா மரேஜை பார்ப்பதற்காக மெட்ரோ ரயிலில் புறப்பட்டோம்.ரயில் பயணமே நம்மை ஆரம்பத்திலேயே வியக்க வைத்து விட்டது. ஓட்டுநர் இல்லாத ட்ரெயினும், ஆரவாரம் இல்லாமல் அற்புதமாக அமைதியாக ஒவ்வொருவரும் பொது இடங்களிலும் பின்பற்றும் சுய ஒழுக்க கட்டுப்பாடுகளும் நநம்நாட்டு குடிமகனுக்கு எப்போது வருமொ தெதெரியாது.
ஆளில்லாத டிக்கெட் Check in மற்றும் check out விஞ்ஞான வளர்சியின் ஒரு மைல்கல். இன்னும் சொல்லப்போனால் வார்த்தைகளால் விவவரரிக்க முடியாத அளவிற்கு அவர்களின் ரயில் நிலைய அமைப்புகள் உரிந்தன. நேரில் அனுபவத்தில் மட்டுமே தெளிவாக அறியக்கூடிய அமைப்பாக இருந்தது.
மரினா மரேஜ்
சிங்கப்பூரின் அடையாள சின்னமாய் அந்த அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரூ இடமான மரினா மரேஜ்தான் சிங்கப்பூரில் நாங்கள் முதலில் பார்த்த இடம்.
அதைநோக்கி பயணம் செய்த சில மணி நேரங்களிலேயே புரிந்தது சிங்கப்பூரின் பெருமை அதன் வானுயர்ந்த கட்டிடங்ளும், தூய்மை நெறியும் மற்றும் பூமிக்கடியில் அந்த மனிதர்களின் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை காட்டும் மினி நகரங்களும்தான்.
இந்தியப்புராணங்களில் சொல்லப்பட்டுள்ள சொர்ககமும்,வானுக்கும் மமண்ணுக்கும் இடையேயான திரிங்கு சொர்க்கமுமம் எந்த அளவு உண்மையோ தெரியாது. ஆனால் சிங்கப்பூரின் மனிதர்களால் உருவாகப்பட்டுள்ள மண்ணுக்கடியில் உள்ள சொர்க்கம் உண்மையிலும் உண்மை.
பூமிகடியில் குறைந்த பட்சம் 3அடுக்குகளை உருவாக்கி உள்ளார்கள். ஒவ்வொரு அடுக்கும் அழகானவை அல்ல!மனிதர்ககால் அழகு படுத்தப்பட்டவை.
மரினா  அடைந்தோம் 'அடேயப்பா' பிரமாண்டத்தின் அணிவகுப்பும் , தூய்மையின் அழகும் , வானத்தை பளபளப்பாக்கும் திறமை கடவுளை சார்ந்தது ஆனால் தரையை பளபளப்பாக்கி தூய்மையில்,அழகியலில் வானத்தையும் மிஞ்சிய அழகை தரைக்கும் தந்தது சிங்கபூரின்  அரசு மட்டுமல்ல ,ஒவ்வொரு சிங்கப்பூர் குடிமகங்கலுக்கும் அந்த பெருமை சாரும்.
'சிங்கப்பூரின் தரைகளில் சாதம் போட்டு சாப்பிடலாம்' என்பது அங்கு போய் வந்த ஒவ்வொருவரும் சொல்லும் வார்த்தைதான் ஆனால் என்னுடைய அனுபவத்தில் அது இன்னும் வித்தியாசமாகப்பட்டது. ஆம்! அங்குள்ள கழிவறைகளில் கூட உட்கார்ந்து சாப்பிடலாம் ,எந்த அருவ்ருப்பும் வரப்போவதில்லை. இது மிகைபடுத்தல் அல்ல! அதுதான் உண்மை நண்பர்களே!
       கிட்டதட்ட 12 கிலோமீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள மரினா மரெஜ் என்னும் அந்த இடம்தான்  ,பெரிய காயலின் நடுவே சிங்கபூரின் அடையாள் சின்னமான வாயிலிருந்து நீரை கொப்பளிக்கின்ற சிங்கத்தை  கொண்டு அமந்துள்ளது. அந்த வட்ட வடிவமான அந்த காயலை சுற்றி அழகோ அழகு.
ந்த இடங்களை சுற்றி பார்க்க பார்க்க நம் மனதினுள் திரும்ப திரும்ப தோன்றிய விசயங்கள் கடுமையான உழைப்பு, நம்பிக்கை,படைப்பாற்றல்,நேர்மை,ஒத்துழைப்பு ஆகியவைதான்...
                                                                                    தொடரும் நண்பர்களே..........

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence