சோம்பலை முறி

வேங்கைகளே உங்களுக்கு
சோம்பலைத் தெரியுமா?
சுட்டெறிக்கும் சூரியனே
சோம்பலைத் தெரியுமா?
உடலுக்குள் புகுந்து விட்டால்
உலகுக்கு உன்னை அது காட்டாது!
சோம்பித்திரிந்தவன் கூம்பி
பிழைப்பான்!

உறக்கத்தில் சுகம் காண்பவன் வாழ்க்கை என்றும் இறக்கத்தில்!

விண் சோம்பலுற்றால்
மழை இல்லை!
மண் சோம்பலுற்றால்
மரம் இல்லை!
மரம் சோம்பலுற்றால் கனி இல்லை!
மனிதன் சோம்பலுற்றால்
மனிதனே அல்ல!
சாம்பலாகும் வாழ்க்கையில்
ஊஞ்சலாக ஆடிட
சோம்பல் அகற்றிடு
சுயம் வளர்த்திடு!

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence