காலச்சக்கரம்
காளையை அடக்கி
கல்லும் தூக்கிப்போட்டால்
கல்யாணம் இது
ஒரு காலம்!
கம்யூட்டரும் படித்து
செல்லும் வாங்கிதந்தால்
கல்யாணம் அது
இக்காலம்!
விருந்தினரை உபசரித்தது
ஒரு காலம்!
விரைந்து சென்று வழி அனுப்புவது
இக்காலம்!
சாப்பிட்டதும் வெற்றிலை
போட்டது ஒருகாலம்!
சாப்பிட்டதும் மாத்திரை
போட்டது இக்காலம்!
சொல்லுக்கு மதிப்பளித்து
உண்மையே பேசியது
ஒருக்காலம்!
செல்லை வைத்துக்கொண்டூ
பொய்யே பேசி
தொலைப்பது
இக்காலம்?
குருவே சரணம் என
கல்வி கற்று
கடமை ஆற்றியது
ஒருகாலம்!
குறையுடன் கல்வி
கற்று உளமதிப்புகள்
குலைந்திட
மதிப்பெண் வாங்கிடும்
இக்காலம்?
Comments
Post a Comment