தேர்தல் வரப் போகிறது
அரசியல் ஆண்டவர்கள்
ஆச்சர்ய தரிசனங்கள்
தருவார்கள்!
கட்சிக்கார கடவுள்கள்
கேட்காமலேயே வரம்
தருவார்கள்!
காருக்குள் கச்சிதமாய்
கசங்கிய கரைவேட்டிகள்!
சேரிக்குள்ளும் கறைபடிய
கசங்கும்!
கண்ணாடி ஏற்றி விட்டு
கடமைக்காக சிரித்த
உதடுகள் இனி
காத்துகிடந்து காதலியை
கண்ட
காதலனைப் போல்
வழிந்து நெளிந்து
சிரிக்கும்!
அசைவ உணவகங்கள்
அசாத்தியமாய்
ஆவார்கள்!
ஜவுளி வியாபாரிகள்
சவுகரியமாய் சம்பாதிப்பார்கள்!
பூக்கடைக்காரர்கள் இனி
பூரிப்படைவார்கள்!
பாருக்குள் நடக்கும்
நம் பாரத தொகுதிகளின்
பங்கீடு!
ஊருக்குள் உறங்கி
போதையில் கிறங்கி
கிடந்த
காலிகளுக்கும் இனி
ஜாலிதான்!
வாக்குறுதிகளை நம்பி
வாக்குகள் அளித்து
மீண்டும் போடுவோம்
சமுதாய முன்னேற்றத்திற்கு
வேலிதான்!
Comments
Post a Comment