சென்னை வெள்ளம் சொன்ன சேதி

சென்னை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவை
ஓர் மதிப்பீடு!
பணக்கணக்கில் பலகோடி
ரூபாய்கள் இழப்பு!
மனக்கணக்கில்
மனிதநேயத்தின்
மீதம் மீண்டும் மீட்பு!

இழுத்து செல்லப்பட்ட
சாலைகள் மீண்டும்
வேண்டும்!
ஆனால் அடித்து
செல்லப்பட்ட சாதிகள்
இனி வேண்டாம்!

மரித்துப்போன மனிதர்களுக்கு
கண்ணீர் அஞ்சலி! -ஆனால்
மடிந்துபோன மதங்களுக்கு இன்றுதான் வழியனுப்பும்
வாகை விழா!

கரைந்துபோன கட்டிடடங்களை
மீண்டும் எழுப்புவோம்!-ஆனால்
உடைந்துபோன ஏற்றத்தாழ்வு
சுவர் மண்ணோடு
மண்ணாகட்டும்!

படிந்துவிட்ட அழுக்குகளை
சுத்தம் செய்வோம்!-ஆனால்
மடிந்து விட்ட அரசியல்
அழுக்குகளை இனி
அடக்கம் செய்வோம்!

நீந்தி சென்று கையில்
உதவிகளை ஏந்தி
சென்று!
உயிர் காத்து நின்றவர்களை
போற்றுவோம்
வீரன் என்று!

கட் அவுட்களுக்கு
பால் ஊற்றி
போற்றி வளர்த்த
பாம்புகளுக்கு
இனியாவது கற்றுத்
தருவோம்
முட்டாள்கள் இல்லை
நாம் என்று!

மழை வெள்ளம்
சொல்கிறது!
மனிதா !
நான் இழுத்து சென்றது
உன் உடைமைகளை
மட்டுமல்ல!

சாதி,மதம்,மொழி
ஏழை,பணக்காரன்
என்ற உன்
அறியாமையையும்தான்!
மன்னித்துக்கொள்
உனக்கு பாடம்
சொல்லித்தர
ரெளத்திரம் எடுத்தமைக்காக!

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence