விரும்பு....

மணிக்கூண்டு மதியம் 12.50.,எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அந்த கல்லூரிச்சாலையில் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடனும், மாணவிகள் தங்கள் தோழிகளுடனும்,சில மாணவர்கள் தங்கள் ஜோடிகளுடனும் பேசுவதும்,சிரிப்பதும் ,சிலர் தங்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதுமாக இருந்தனர்.
சாலையோர கடைக்காரர்கள் தங்கள் வியாபாரத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.சாப்பாட்டு நேரம் என்பதால் ஹோட்டல்கள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

அந்த கல்லூரிசாலையிலேயே மாணவர்களும்,மாணவிகளும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்ற ஹோட்டலின் அருகே உள்ள ஒரு மின்கம்பத்தின் கீழே சிமெண்ட் தளத்தில் அவன் மட்டும் முகத்தில் சோகத்துடன்.,அழுக்கும்,கிழிந்தும் போன உடைகளுடன்,கண்களில் ஏக்கதோடு எதையோ எதிர்பார்து இருப்பது போல் இருந்தது.

இதற்கிடையே அந்த ஹோட்டலுக்குள்...
        அந்த மாணவர் கூட்டம்,தங்களுக்கே  உரிய நக்கல்,நையாண்டிகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.சர்வர் வேக வேகமாக அவர்கள்சொன்னதெல்லாம் கேட்டு பரிமாறிக்கொண்டிருந்தார்.
அதில் ஒரு மாணவன் "டேய் செல்போனை வைச்சு அங்கே என்னடா பண்ணிட்டு இருக்க? "என்றான்.

"என்னடா பண்ண சொல்ற?நானும் என்னவெல்லாமோ பண்ணி பார்க்கிறேன் இருபது லைக்ஸ்க்க மேல விழமாட்டேங்குது.நேத்து பக்கத்து வீட்டு பாட்டி செத்தத கூட போட்டோ எடுத்து போட்டுபார்த்தேன் ஆனாலும் 25லைக்ஸ்தான் விழுந்திருக்கு"என்றான்.

உடனே பக்கத்தில் இருந்தவன் லேசான அதிர்ச்சியுடன்,"பக்கத்து வீட்டு பாட்டி செத்துப்போச்சசா,அதுக்கு ஒரு அழகான பேத்தி இருக்குல்ல"என்றான்

இன்னொருவன்,"பாட்டி போட்டோவெல்லாம் போட்டா அவ்ளோ லைக்தான் விழும்.பேத்திகள் போட்டோ போடூடா அப்புறம் பாரு எவ்ளோ லைக் விழுதுண்ணி."என்றான் சிரிப்புடன்,இதைகேட்டு எல்லோரும் சிரிக்க,அப்போதுதான் அது நிகழ்ந்தது.,.. ,ஒரு மணி சங்கு பெருங்குரலெடுத்து ஓ ஓ வென ஊத,அந்த பகுதியில் இருந்த எல்லோரும் காதுகளை  இரு கைகளாலும் அடைத்துக் கொண்டனர்.சிலர் அந்த இடைத்தை விட்டு நகர்ந்து செல்வதிலேயே குறியாக இருந்தனர்.ஆனால் அந்த மின் கம்பத்தின் கீழே சோகமாக நின்றவன் மட்டும் துள்ளி குதித்தான் அங்குமிங்கும் பாடி யபடியே ஓடினான்.அந்த சங்கிற்கு போட்டியாக பெரும் குரலெடுத்து கத்தினான்.அவன் முகத்தில்ஆயிரம் வால்ட் பிரகாசம்,சிரிப்பு எல்லாம் ஒரே நேரத்தில் வந்தது.
சந்தோசத்தில் சாலையில் இறங்கி ஓட ஆரம்பித்தான், எல்லோரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.நேராக அந்த ஹோட்டலுக்கு பின்புறம் சென்று ஒரு  கல்லில் உட்கார்ந்தான்,பக்கத்தில் இருந்த குப்பைத்தொட்டியை கிளற ஆரம்பித்தான்.1 மணி ஆதலால் நிறைய எச்சி இலைகள் அவனுக்கு கிடைத்தன.அவற்றை இரு கையாலும் அள்ளி எடுத்து அவசர அவசரமாக உண்ண ஆரம்பித்தான்.
    சாப்பிடும் போது அவனது கண்கள் ஊதிய சங்ககை அவ்வப்போது பார்த்து நன்றியோடு சிரித்துக் கொண்டது.
இதற்கிடையில் ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த அந்த மாணவர்களில் ஒருவன்,"டேய்,மாப்பிள்ளை அங்க பாருடா!ஒரு பைத்தியக்காரன்  எச்சி இலையை நக்கி சாப்பிடுறான்டா,  அவன் என்னவோ பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிடுறது மாதிரி சிரிச்சிகிட்டே சாப்பிடுறான்",என்றபடி சிரித்தனர்.
    அதில் ஒருவன் திடீரென எழும்பி அந்த பைத்தியக்காரனை நோக்கி ஓடினான்.
"டேய் இவன் ஏண்டா! இப்படி ஒடுறான்.இவனும் போய் எச்சி இலை சாப்பிட போறானா?"என்றான் சிரித்தபடி....
அந்த பைத்தியக்காரனை நோக்கி சென்ற அந்த மாணவன் அவனருகே சென்றதும் தன் சட்டை பாக்கெட்டிலிருந்த சில பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்தான்....
இதை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இன்னொருவரிடம்,"பாருய்யா, நாம இத்தனை பேருக்கும் தோணாத விஷயம் அந்த சின்ன பையனுக்கு தோணிருக்கு ,அந்த பைத்தியக்காரன் எச்சில் இலை சாப்பிடறத பார்த்து இரக்கப்பட்டு தன்  கைகாச கொடுக்கப்போறான்.,ச்ச்ச்...இந்த காலத்து பசங்க உண்மையிலேயே நல்ல மனப்பபான்மை உள்ளவங்கதாய்யா!" இருவரும் சிலாகியித்துக் கொண்டனர்.
              இதற்கிடையில் அந்த மாணவன் எடுத்த பத்து ரூபாய் நோட்டுக்களை ஒழுங்காக அடுக்கி தன் பேண்ட் பின் பாக்கெட்டில் வைத்தான்,மீண்டும் தன் சட்டை பையில் கை விட்டு தன் விலை உயர்ந்த செல்போனை எடுத்து பைத்தியக்காரனை சுற்றி சுற்றி வீடியோ எடுக்க ஆரம்பித்தான்,
பல கோணங்களில் போட்டோ எடுத்தான்.இதைப்பார்த்த பைத்தியம் பயந்து எச்சில் இலையையும் போட்டு விட்டு அந்த மின்கம்பத்தை நோக்கி ஓடினான்.
மின்கம்பத்தின் அடியில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.அவன் முகத்தில் ஒருவித பீதியும்,கூடவே ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது,மீண்டும் அந்த சங்கு எப்போது ஊதும் என்று...
    போட்டோ எடுத்த மாணவன் திரும்பி தன் நண்பர்கள் பக்கம் வந்தவாறே,"டேய்,பாவம்டா அந்த கிறுக்கன்,பயந்து ஓடிட்டான்,இப்போ பபாரு இதை அப்லோடு பண்ணி, இன்னைக்கி சாயங்காலத்துக்குள் ஏகப்பட்டா லைக்ஸ் வாங்குறேன்."என்றான் தன் செல்லை நோண்டியவாறே..

"அடப்பாவிகளா!செல்போன்ல லைக்ஸ் வாங்க ஒரு பைத்தியக்காரன் பசியோடு விளையாடிட்டீங்களே!" அந்த இருவரும் மீண்டும் அங்கலாயித்துக் கொண்டனர்
பைத்தியக்காரன் மின்கம்பம் அருகே அடுத்த வேளை எச்சில் சோற்றுக்காக சங்கை எதிர்பார்த்து காத்து இருந்தான்.

Comments

Popular posts from this blog

உளவியல் பொருள்,வரையறை, வகைகள் மற்றும் உளவியல் பிரிவுகள்.

Gardner's Multiple Intelligence

Assessment of Intelligence