மனைவி
மனம் கவலையில்
கவிழும்போது
மனப்பபுண்ணிற்கு
மருந்திடும்
மருத்துவச்சி!
மனமகிழ்ச்சியில்
முகம் மத்தாப்பாய்
ஜொலிக்க அதுகண்டு
குதுகலிக்கும் குணக்குன்று!
துயரங்கள் துரத்தையில்
துணைநின்று
தோள்கொடுக்கும்
தோழி!
களைத்து நின்றபோது
காதல் செய்து களிப்பூட்டி
கனிய வைத்த காதலி!
உழைத்து வந்தபோது
உணவு ஊட்டீ
உறங்க வைத்த
உயர் அன்னை!
வள்ளுவனின்
இன்பத்துபாலை
வழுவாது தந்து
பிள்ளை வளம்
இல்லம் சேர்த்த
இன்ப நாயகி!
தள்ளாடும் காலத்தில்
சொல்லாலும் செயலாலும்
தயவோடு தாங்கிய
சுமைதாங்கும் சேவகி!
கடைசி காலத்தில்
கணவனை கருணையோடு
தாங்குகின்ற கடவுள்!
Comments
Post a Comment