தொப்புள் கொடி
உறவுகளில் புனிதமானதும்,உன்னதமானதுமாய் ஒரு உறவு உண்டு என்றால் அது தொப்புட்கொடி உறவுதான்.ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் கருவறையில் தொடர்பு ஏற்படுத்தி கொடுப்பது தொப்புட்கொடி. தாயின் மூச்சுக்காற்றை பிள்ளைக்கும்,பிள்ளையின் கருவறை கற்பனைகளை தாய்க்கும் கடத்தி மரபின் பெருமையை காத்து பிள்ளையை வெற்றிக்கொடியை நாட்டச்செய்வது தொப்புள் கொடியால் தாயுடன் இணைக்கப்பட்ட காலங்கள்தான்.
மகாபாரத்தில் படித்திருக்கிறோம் அபிமன்யுக்கு தாய் சுமத்ரா தொப்புள்கொடி மூலம் பாடம் சொல்லி,கருவறையில் இருக்கும்போதே அபிமன்யுக்கு போர்முறைகள் சொல்லி கொடுத்ததாக பாரதம் சொல்கிறது.ஆக தொப்புள் கொடி என்பது உணவை மட்டுமல்ல உணர்வையும் தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது.
எத்தனை மைல்கள் தொலைவில் பிள்ளை இருந்தாலும் அவனை சுற்றியே வட்டமிடும் மனது தாய் மனதுதான்.தாய்ப்பாசத்தில் அப்பழுக்கும் இல்லை,எந்தவித பேதமும் இல்லை.மகன் கலெக்டராக இருந்தாலும்,கண்டக்டராக இருந்தாலும் ஒரேநிலை பாசத்தை காட்டும் தன்மை தாய்பாசத்திற்கு உண்டு.
Comments
Post a Comment