சுதந்திர வானில்....
லட்சம் பேரின் உயிரை
விலையாக கொடுத்து
லட்சிய சுதந்திரத்தை
வாங்கி விட்டோம!்
சுதந்திரம் வானில் 67 ஆண்டுகள்
அலட்சியமாக பறந்து விட்டோம!்
சுதந்திர தியாகங்களை தந்திரமாய்
மறந்து விட்டோம!்
மனித மனங்களை எந்திரமாய்
மாற்றி விட்டோம!்
பண பதவிகளை மூல மந்திரமாய்
ஏற்று விட்டோம!்
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
ஆனந்த சுதந்திரம் ஆவியாகி
கொண்டிருக்கிறது என்று...!
ஆந்தை கூவும் பொழுதில்
ஆனந்த சுதந்திரம் பெற்றோம்!
இன்று ஆந்தைக்கு நிகராக
முழித்து கொண்டிருக்கிறோம்!
Comments
Post a Comment